தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 டன் குட்கா, ஹான்ஸ் பறிமுதல் - ஒத்துழைப்பு கொடுக்க வடமாநில ஊழியர்கள் மறுப்பு - ஹான்ஸ்

சென்னை: ரயிலில் கடத்தி வரப்பட்ட நான்கு டன்னுக்கும் அதிகமான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன

குட்கா
குட்கா

By

Published : Sep 29, 2021, 12:48 PM IST

Updated : Sep 29, 2021, 12:56 PM IST

வட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்ஸ் ரயிலில் உரிய ஆவணம் இல்லாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மின்சாதன பொருள்கள், செல்ஃபோன் கடத்தப்படுவதாக வணிகவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அலுவலர்கள் நேற்று சென்னை ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்த கூட்ஸ் ரயிலி்ல் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ், பாக்கு உள்ளிட்ட பொருள்கள் 4 டன் ரயிலில் கடத்தியது தெரிந்தது.

அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் ரூபாய் மதிப்புடைய மின்சாதன பொருள்கள் மற்றும் செல்ஃபோன்களும் இருந்தன. தொடர்ந்து வணிக வரித்துறை அலுவலர்கள், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்களையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.

அப்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை ஆகிய காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குட்கா உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி கிரீம்ஸ் ரோடு சாலையில் அமைந்துள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வணிகவரித் துறை அலுவலர்கள் தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட மின்சாதன பொருள்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று வணிகவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முதல்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பிகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் வாங்கி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து பல்வேறு பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கார்த்திக் பற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவன மேலாளர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குட்கா, ஹன்ஸ், பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

Last Updated : Sep 29, 2021, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details