நீண்ட காலமாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிக்காமல் இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்க காவல் ஆய்வாளர் சம்பத் தலைமையில் குழு அமைத்து தேடுமாறு இணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சம்பத் தலைமையிலான குழு பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மலர் மன்னன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சென்னையில் பல்வேறு இடங்களில் 100 சவரன் நகையை கொள்ளையடித்து மதுரையில் விற்றதாக மலர் மன்னன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சம்பத் தலைமையிலான குழு மதுரையிலிருந்து நகையை மீட்டு வந்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் மீது நகை கையாடல் செய்ததாக புகார்!.. - குட்கா வழக்கு
சென்னை: குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை கையாடல் செய்த குற்றப்பிரிவு ஆய்வாளாரிடம் நியாயத்தைக் கேட்டதால், தங்கள் மீது பொய்ப் புகார்களைக் கூறி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய விவகாரம் தொடர்பாக 4 போலிசார் காவல் ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை திரும்பிய தனிப்படை போலிசார் பறிமுதல் செய்யப்பட்ட 100 சவரனில் 70 சவரனை மட்டும் கணக்கில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டதில் 30 சவரன் நகையை மறைத்தது குறித்து ஆய்வாளர் சம்பத்திடம் காவலர்கள் நியாயம் கேட்டுள்ளனர். இதனால் ஆய்வாளருக்கும் காவலர்கள் 4 பேருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் நியாயம் கேட்ட சதிஷ்குமார், விஜய் கார்த்திக், சிவபாலன், மனோஜ் ஆகிய நான்கு காவலர்கள் மீதும் தேவையற்ற புகார் கூறப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. இதில் தன்னிலை நியாயம் குறித்து காவல் ஆணையரை நேரில் சந்தித்து 4 காவலர்களும் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உயர் காவல் அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் ஆய்வாளர் சம்பத்திடம் கேட்டதற்கு, கொள்ளை வழக்குகளில் நகை பறிமுதல் செய்தது உண்மைதான். ஆனால் அதை நான் கையாடல் செய்ய முயற்சித்ததாக 4 காவலர்கள் கூறுவதது முற்றிலும் தவறு. பணியில் ஒழுக்கம் இல்லாமலும், பொறுப்பில்லாமலும் செயல்பட்டதால்தான் 4 பேரையும் உயர் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார்கள் என தெரிவித்தார். புகாருக்குள்ளான ஆய்வாளர் சம்பத்துக்கு குட்கா வழக்கில் தொடர்பு இருப்பதாக சிபி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.