சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குகன். உணவு பண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார். இவர் இன்று ஐ.சி.எஃப். தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி வழியாக காரில் சென்றுள்ளார்.
அப்போது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அவரது வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் அதனை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, தேர்தல் பறக்கும்படை அலுவலர்களான பாபு, வாசுதேவன், கார்த்திகேயன், வீரமணிஆகியோர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றால் இரண்டாயிரம் ரூபாய்லஞ்சமாககேட்டுள்ளனர்.
இதையடுத்து, ஜெயக்குகன் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் பறந்தது.
இதன்பேரில், மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் சங்கீதா தீவிர விசாரணை மேற்கொண்டதில் தேர்தல் அலுவலர்கள் நான்கு பேர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம்!