தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன - vacciine status

தமிழ்நாட்டிற்கு மேலும் 4 லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன
4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

By

Published : Aug 13, 2021, 3:04 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.13) புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 40 பார்சல்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.

இந்த தடுப்பூசிகளை மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details