தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் விடுமுறை : விமான டிக்கெட் கட்டணம் உயர்வு..! - விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுவதற்கு

விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்தாலும் பயணிகள் 4 நாள்கள் தொடா் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் செல்கின்றனர்.

விமான டிக்கேட் கட்டணம் உயர்வு : பயணிகள் மகிழ்ச்சி.. 4-day-consecutive-holiday-impact-in-air-ticket-fare-increase-in-tamil-nadu
விமான டிக்கேட் கட்டணம் உயர்வு : பயணிகள் மகிழ்ச்சி..4-day-consecutive-holiday-impact-in-air-ticket-fare-increase-in-tamil-nadu

By

Published : Apr 14, 2022, 1:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாள் என 4 நாள்கள் தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையின் போது கரோனா தாக்கம், ஊரடங்கு இருந்ததால் பொதுமக்கள் அதிகமாக எங்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது கரோனா பீதி தமிழ்நாட்டில் ஓய்ந்து உள்ளது. மாநிலம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சகஜ நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 4 நாட்கள் விடுமுறையை உற்சாகமாகக் கழிப்பதற்கு மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுவதற்கு

சொந்த ஊர்களுக்கும், கோடை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர். ரெயில், பஸ், சொந்த வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

தற்போது விமான பயணத்தை விரும்புகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா தளங்களுக்கும் சொந்த ஊர்களுக்கும் மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

விமான டிக்கேட் கட்டணம் உயர்வு

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, கொச்சி, அந்தமான், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

கொடைக்கானல் செல்பவர்கள் மதுரை விமானங்களையும், ஊட்டி செல்பவர்கள் கோவை விமானங்களையும் படகு சவாரி போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்பவா்கள் கொச்சி அந்தமான், கோவா விமானங்களில் செல்கின்றனர்.

விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுவதற்கு

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா தளங்களுக்குச் செல்லும் பயணிகளும், விமான கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்து உள்ளன. சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் வழக்கமாக ரூ.5,000 வரை கட்டணம் இருக்கும்.

ஆனால் தற்போது ரூ.9,800 மேல் ஆகிறது. திருச்சி விமானத்தில் வழக்கமாக ரூ.4,000 கட்டணம் தற்போது ரூ.8,000 வரை உயர்ந்து உள்ளது. கோவை விமானத்தில் ரூ.3,000 கட்டணம் தற்போது ரூ.9,000 வரை உயர்ந்து உள்ளது. சுற்றுலா தளமான அந்தமான் விமானங்களில் ரூ.13,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையம்

இதேப்போல் விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்தாலும் பயணிகள் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் செல்கின்றனர். இது சம்பந்தமாக விமான நிறுவனங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் ஏஜென்சிகளிடம் கேட்டபோது, “கரோனா பீதியால் 2 ஆண்டுகள் வீடுகளில் மக்கள் முடங்கி கிடந்தனர்.

தற்போது கரோனா பீதி ஓய்ந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரே நேரத்தில் அதிக அளவு குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டண டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டதால், தற்போது அதிக கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன. இது வழக்கமாக நடக்கக் கூடியதுதான் என்று கூறுகின்றனர்” என்றார்.

விமான டிக்கேட் கட்டணம் உயர்வு

இதையும் படிங்க:இன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

ABOUT THE AUTHOR

...view details