சென்னை:அம்பத்தூர், லெனின் நகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு திருமுல்லைவாயில் குளக்கரை சாலையில், 'மோட்கோல்டு' என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை குறித்து விளம்பரம் செய்வது தொடர்பாக முதலீட்டாளர்களை வரவேற்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதைக் கண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நீலம்மேகம் என்பவரின் மூலம் பல்லாவரத்தைச் சேர்ந்த வைஷாலி என்பவர் இதற்காக ரூ.7 லட்சம் முதலீடு செய்தார்.
இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு வரையில் மருத்துவமனையின் லாப பணத்தை வைஷாலி பெற்றுள்ளார்.பின்னர், தான் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் இல்லாததால் லாபம் உட்பட அசல் தொகையை சுந்தரமூர்த்தியால் வைஷாலிக்கு திருப்பி தர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வைஷாலி பலமுறை தனது முதலீடு பணத்தைக் கேட்டும் தரமால் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று (நவ.28) சேலத்தில் வசிக்கும் நீலமேகம் என்பவரின் மூலம் வைஷாலி என்பவர் பேச்சுவார்த்தை நடத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் உள்ள டீ கடைக்கு உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து சுந்தரமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் சிவலிங்கம் என்பவருடன் சம்பவ இடத்தில் சென்று பேசிக்கொண்டு இருந்துள்ளார்.