தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் குன்றிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: போக்சோவில் 4 பேர் கைது! - Pocso act

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, தன் நண்பர்களுடன் இணைந்து காதலன் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவழக்கில் நான்கு பேர் கைது
மனநலம் பாதிப்படைந்த்

By

Published : Nov 1, 2021, 10:55 AM IST

Updated : Nov 1, 2021, 11:56 AM IST

சென்னை: பாடி, கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (40).

மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமி

இவர் கடந்த 27ஆம் தேதி ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட தன் 16 வயது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்து இருந்தார். அதில் காணாமல் போன சிறுமி ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு, மெரினா கடற்கரையில் இருந்த நான்கு நபர்களால் கற்பழிக்கப்பட்டது தொடர்பான, போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் சிறுமியைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

காவல் துறையினர் தொடர்ந்து சிறுமியைத் தேடி வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி இரவு அவர் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, குமார் தனது மகள் வீடு திரும்பிய தகவலை ஜெஜெ நகர் காவல் துறையில் தெரிவித்தபோது, அவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த காதலன்

அவ்விசாரணையில் வீட்டு வேலைக்குச்ஷ் செல்லும் சிறுமியை அதே பகுதியில் எலக்டிரிசியன் வேலை செய்யும் பாடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய விக்கி (எ) ஏழுமலை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், பல முறை தான் வேலை செய்யும் இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்ததுள்ளது.

தொடர்ந்து, அக்.27ஆம் தேதி விக்கியின் நண்பர் ராமு தான் வேலை செய்யும் இடத்துக்கு விக்கி சிறுமியை அழைத்ததாகக் கூறி கூட்டிச் சென்று, பல முறை அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் மாலை ஐந்து மணியளவில், கோயம்பேடு பகுதிக்கு அவரை காதலன் விக்கி அழைத்து வரச்சொன்னதாகக் கூறி, ஜெஜெ நகர், பாரி சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காதலன் விக்கி பெயரில் புக் செய்யப்பட்டு இருந்த அறையில் இருந்த கிருஷ்ணராஜ், பாலசந்திரன் (எ) முருகன் இரண்டு பேரும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டுப் பாலியியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கைது

இந்நிலையில்,அனைவரும் திருமணம் ஆனவர்கள் என்பதால், இரவு விக்கியிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இரவு முழுவதும் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த விக்கி, மறுநாள் சிறுமியை அவரது வீட்டின் அருகே விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், தன்னை விட்டுவிடுமாறு அழுதபோதும் தன்னை தொடர்ந்து வன்புணர்வு செய்ததாக சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் காதலன் விக்கி (எ) ஏழுமலை, ராமு, கிருஷ்ணராஜ், பாலசந்திரன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குறிப்பாக காதலன் விக்கி (எ) ஏழுமலை, ராமு, கிருஷ்ணராஜ் ஆகிய மூவரை கைது செய்ததை அடுத்து, பாலசந்திரனைத் தேடி வந்த நிலையில், சிறுமியை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில் அவர் காட்டிய அடையாளத்தின் படி, பாலசந்தரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் பார் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

Last Updated : Nov 1, 2021, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details