தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 379 மருத்துவ முகாம்கள்! - மருத்துவ முகாம்கள்

சென்னை: சென்னையில் இன்று 379 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 379 மருத்துவ முகாம்கள்!
சென்னையில் ஒரே நாளில் 379 மருத்துவ முகாம்கள்!

By

Published : Nov 11, 2020, 4:19 AM IST

சென்னையில் கரோனா வைரஸ் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது, இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது.

இந்த நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தினந்தோறும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது .

மே 8ஆம் தேதிமுதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 67 ஆயிரத்து 779 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில் 34 லட்சத்து 56ஆயிரத்து198 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று 379 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 49, அடையாறில் 39 மருத்துவ முகாம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற 379 மருத்துவ முகாம்களில் மொத்தம் 18 ஆயிரத்து 197 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 525 நபர்களுக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அவர்கள் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details