தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையிலிருந்து தனி விமானத்தில் சென்ற 374 ஆஸ்திரேலியர்கள்! - Chennai to Australia Special Flight

சென்னை:கரோனா வைரஸ் பீதி காரணமாக தென் மாநிலங்களில் வசித்து வந்த 374 ஆஸ்திரேலியா்கள் சென்னையிலிருந்து தனி சிறப்பு விமானத்தின் மூலம் தங்களது நாட்டிற்கு திரும்பிச் சென்றனா்.

சென்னையிலிருந்து தனிவிமானத்தில் சென்ற 374 ஆஸ்திரேலியர்கள்!
சென்னையிலிருந்து தனிவிமானத்தில் சென்ற 374 ஆஸ்திரேலியர்கள்!

By

Published : Apr 20, 2020, 10:57 AM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் தென் மாநிலங்களின் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியா்கள், ஆஸ்திரேலியா தூதரகத்தில் பணிபுரியும் ஊழியா்களின் குடும்பத்தினர் பலரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அலுவலர்கள், இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனி சிறப்பு விமானத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி ஆஸ்திரேலியாவிலிருந்து தனி சிறப்பு விமானம் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.

சென்னையிலிருந்து தனிவிமானத்தில் சென்ற 374 ஆஸ்திரேலியர்கள்!

அதற்கு முன்னதாகவே அந்நாட்டு தூதரக அலுவலர்கள் சிறப்பு வாகனங்களில் 26 குழந்தைகள்,135 பெண்கள் உட்பட 374 ஆஸ்திரேலியா்களை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனா். அவர்களுக்கு விமான நிலையத்தில் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் பிற சோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது அவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்து வரிசையில் நின்றனர். பின்னர் அனைவரும் மாலை 3 மணிக்கு சிறப்பு தனி விமானம் மூலம் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அடிலெய்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு: குற்றவாளிக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details