சென்னையில் மட்டும் 373 பேருக்கு கரோனா பாதிப்பு!
சென்னையில் மொத்தம் 373 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அதன் பரவலைக் கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதுவரை சென்னையில் 373 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- தண்டையார்பேட்டை- 46 பேர்
- ராயபுரம் - 117 பேர்
- திரு.வி.க. நகர் - 45 பேர்
- தேனாம்பேட்டை - 44 பேர்
- திருவொற்றியூர் - 13 பேர்
- அடையார் - 7 பேர்
- பெருங்குடி - 8 பேர்
- ஆலந்தூர் - 7 பேர்
- வளசரவாக்கம் - 10 பேர்
- சோழிங்கநல்லூர் - 2 பேர்
- அண்ணாநகர் - 32 பேர்
- கோடம்பாக்கம் - 36 பேர்
- மணலி - ஒருவர்
- அம்பத்தூர் - ஒருவர்
- மாதாவரம் - 3 பேர்
TAGGED:
corona case in chennai