நிவாரண நிதி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள், மற்றும் பொது மக்களிடமிருந்து மே மாதம் ஐந்தாம் தேதிவரை 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் பெறப்பட்டது .
இதன் தொடர்ச்சியாக, மே 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை உள்ள ஒன்பது நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதன் விவரங்கள்:
- சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் 5 கோடி ரூபாய்
- சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 2 கோடி ரூபாய்
- மோபிஷ் இந்தியா பவுண்டேஷன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்
- சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட், மணலி 1 கோடி ரூபாய்
- பைஜுஸ் (Think and Learn Pvt Ltd)), 1 கோடி ரூபாய்
- ரானே TRW ஸ்டீரிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் 45 லட்சம் ரூபாய்
- ரானே ஹோல்டிங்ஸ் 25 லட்சம் ரூபாய்
- ரானே NSK ஸ்டீரிங் சிஷ்டம் பிரைவேட் லிமிடெட் 20 லட்சம் ரூபாய்
- ரானே (மெட்ராஸ்) லிமிடெட் 5 லட்சம் ரூபாய்
- ரானே பிரேக் லைனிங் லிமிடெட் 5 லட்சம் ரூபாய்
- மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் 31 லட்சத்து 15 ஆயிரத்து 804 ரூபாய்
- தமிழ்நாடு பான் புரோக்கர்ஸ் அண்டு ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் 31 லட்சம் ரூபாய்
- மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்
- ஆனந்தம் பவுண்டேஷன் 25 லட்சம் ரூபாய்
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களின் ஒரு நாள் ஊதியம் 50 லட்சத்து 67 ஆயிரத்து 908 ரூபாய்
- இந்தியன் ஆயில் நிறுவனம் 1 கோடி ரூபாய்
- மாநில திட்ட இயக்குநரகம் 93 லட்சத்து 28 ஆயிரத்து 340 ரூபாய்
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 76 லட்சத்து 49 ஆயிரத்து 666 ரூபாய்
- மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர் 10 லட்சம் ரூபாய்
- MEPCO Schienk மெட்ரிகுலேஷன் பள்ளி 15 லட்சத்து 7 ஆயிரத்து 430 ரூபாய்
- ஞ.சு சுந்தர் மேன்சன் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்
- அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை 27 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்
- கோயம்புத்தூர் மாநகராட்சி 13 லட்சத்து 66 ஆயிரத்து 664 ரூபாய்
- அல்ட்ரா மெரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
- ஸ்ரீ சரவணா மில்ஸ் பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்