தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2020: மூலதன செலவுக்காக சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு - 36 thousand crores is allocated for capital expenditure

சென்னை: 2020-21ஆம் நிதியாண்டில் மூலதன செலவுக்காக 36,367.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

36 thousand crores is allocated for capital expenditure
36 thousand crores is allocated for capital expenditure

By

Published : Feb 14, 2020, 1:10 PM IST

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் 2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் ஆகியவை குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

கடன்கள் குறித்த தகவல் பின்வருமாறு:

மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில், 2019-20ஆம் ஆண்டு, 2020-21ஆம் ஆண்டிற்கான கணக்கீடுகளுக்கு மாநில மொத்த உற்பத்திக்கான சமீபத்திய முன் மதிப்பீடு ( தற்காலிகம்) பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூலதன செலவிற்காக 31,220.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டது. 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் அந்தத் தொகை 36,367.78 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது 2021-22, 2022-23ஆம் அண்டுகளில் மேலும் 15 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகரக்கடன்களும் முன் பணங்களும் 2021-22ஆம் ஆண்டு 43,587.34 கோடி ரூபாயாகவும் 2022-23ஆம் ஆண்டு 55,109.96 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் நிதி ஒழுக்கத்தை பராமரிக்கும் அதே வேளையில் வளர்ச்சிக்கான செலவினங்களையும் அதிகரிப்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2020: ஓய்வூதியத்திற்கான செலவினம் ரூ.32,008.35 கோடியாக மதிப்பீடு!

ABOUT THE AUTHOR

...view details