தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 64 விழுக்காடாக புதிய உச்சத்தைத் தொட்ட கரோனா குணமடைவோர் வீதம்!

சென்னை: கடந்த 48 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 41 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனா
கரோனா

By

Published : Jul 27, 2020, 10:15 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்குதல் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஜூலை 25ஆம் தேதி, இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு ஏழாயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தவிர, ராணிப்பேட்டை, விருதுநகர், தூத்துக்குடியிலும் அதிகமான பாதிப்புகள் பதிவாகின்றன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கரோனா குணமடைந்தவர்கள்:

கரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று (ஜூலை 26) ஒரே நாளில் 36,145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 85 ஆயிரத்து 576-ஆக உயர்ந்துள்ளது. நேற்று (ஜூலை 26) குணமடைவோர் வீதம், 63.92 விழுக்காடு என்ற அளவில் புதிய உச்சத்தை நோக்கி வேகமாக நெருங்கி வருகிறது. கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், குணமடைவோர் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்து வந்த நிலைமாறி, தற்போது அதிக அளவிலான நோயாளிகள் குணமடைந்து வருவது பொதுமக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடைவெளி 4 லட்சத்தைக் கடந்து, தற்போது 4 லட்சத்து 17 ஆயிரத்து 694ஆக உள்ளது. கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட (4,67,882), குணமடைவோர் எண்ணிக்கை 1.89 மடங்கு அதிகமாகும்.

'பரிசோதனை செய்தல், தடம் அறிதல் மற்றும் சிகிச்சை' என்ற செயல்திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்தி, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (ஜூலை 25) 4,42,263 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 1,62,91,331-ஆக உயர்ந்துள்ளது. முதல் முறையாக அரசு பரிசோதனைக் கூடங்களில் 3,62,153 மாதிரிகள் பரிசோதனை என்ற புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தனியார் பரிசோதனைக் கூடங்களிலும் ஒரு புதிய உச்சமாக, 79,878 மாதிரிகள் ஒரே நாளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் துறை முயற்சிகளின் மூலம், மருத்துவமனைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான மேம்பாடுகளின் மூலம் அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதன் வாயிலாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் அடையாளம் காண முடியும். இதனால் அதிகமான உயிரிழப்புகளைக் குறைக்க முடியும்.

இதையும் படிங்க: மனிதர்கள் மீதான முதற்கட்ட கோவாக்சின் பரிசோதனை நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details