தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 354 இந்தியர்கள் மீட்பு! - வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் மீட்பு

சென்னை: அமெரிக்கா, குவைத், அபுதாபி, இலங்கை ஆகிய நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 354 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 354 இந்தியர்கள் மீட்பு!
Indians rescued from abroad

By

Published : Aug 17, 2020, 3:12 PM IST

அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 68 இந்தியர்கள் ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தின் மூலம் நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 5 பேரும், விடுதிகளுக்கு 63 பேரும் அனுப்பப்பட்டனர்.

அபுதாபியிலிருந்து 95 இந்தியர்களுடன் ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு மீட்பு விமானம் நேற்று நள்ளிரவு சென்னை வந்தது. அவர்களுக்கு மருத்துவம்,குடியுரிமை,சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 64 பேரும், விடுதிகளுக்கு 9 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று 9 பேர் வீடுகளில் தனிமைபடுத்துவதற்காகவும் அனுப்பப்பட்டனர்.

குவைத்திலிருந்து 152 இந்தியர்களுடன் ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தது. அவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 115 பேரும், விடுதிகளுக்கு 37 பேரும் அனுப்பப்பட்டனர்.

இலங்கையிலிருந்து 39 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் இன்று காலை சென்னை வந்தது. இவர்கள் அனைவரும் அங்குள்ள தனியாா் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். அந்த நிறுவனமே அரசின் சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் இந்தியா அழைத்து வந்தது.

எனவே இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனை, அரசின் இலவச தங்குமிடங்கள் இல்லை. இதையடுத்து குடியுரிமை,சுங்கச் சோதனைகள் முடித்து அனைவரும் தனிமைப்படுத்துவதற்காக விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details