தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”இலவச பேருந்து: 34 லட்சம் பேர் பயணம்” - இலவச பேருந்து பயணத்தில் 34 லட்சம் பேர் பயணம்

நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

34-lakh-people-travel-on-free-buses
34-lakh-people-travel-on-free-buses

By

Published : Sep 8, 2021, 10:19 PM IST

சென்னை : நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதில் நத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாதன் பேசுகையில், ”பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று குறிப்பிட்டு அதாவது வெள்ளை பலகை பேருந்துகளில் மட்டும் இலவசம் என்பதால் அவர்கள் செல்லும் இடத்திற்கு காலதாமதம் ஆகிறது. ஆகவே சொகுசு பேருந்துகள் தவிர்த்து மற்ற பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்” எனக் கூறினார்.

அப்போது குறிப்பிட்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்த பின் 7,317 அரசு பேருந்துகளில் சுமார் 18 கோடியே 38 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 34 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். நாங்கள் 40 சதவீதம் பெண்கள் தான் பயணம் செய்வார்கள் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் சுமார் 60.45 சதவீதம் பேர் பயணம் செய்துள்ளனர்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details