தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai airport: கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் கோளாறு.. விமானியின் செயலால் உயிர் தப்பிய 336 பேர்!

சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தோகா செல்லும் கத்தார் ஏர்வேஸ்(Qatar Airways) பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானி செய்த துரித நடவடிக்கையால் 324 பயணிகள் உட்பட 336 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Apr 24, 2023, 12:33 PM IST

சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கத்தார் தலைநகர் தோகா செல்லும் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) பயணிகள் விமானம் நேற்று புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 324 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 336 பேர் ஏறி அமர்ந்து விட்டனர். பின்னர் அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது.அப்போது அந்த விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இந்த நிலையில் விமானத்தை வானில் பறக்க வைப்பது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்த விமானி விமானத்தை அவசரமாக ஓடு பாதையில் நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விமானம் இழுவை வாகனம் மூலம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்துவரப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தைப் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானம் காலதாமதமாக நேற்று மதியம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவருக்கும் உணவு, சிற்றுண்டி ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

ஆனால் விமானத்தை பழுது பார்க்கும் பணி நேற்று பிற்பகல் வரையில் முடியவில்லை. இதை அடுத்து விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் 324 பேரும் விமான நிலையத்திலிருந்து சொகுசு பேருந்துகளில் ஏற்றி செல்லப்பட்டு
சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் மீண்டும் இன்று திங்கள்கிழமை காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தார் சொல்ல வேண்டிய 324 பயணிகள் சென்னை நகர ஹோட்டல்களில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உடனடி எடுத்த நடவடிக்கை காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விமானத்தில் பயணித்த 324 பயணிகள் உட்பட 336 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் பற்றி விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: G Square IT Raid: ஜி ஸ்கொயர் நிறுவனம், திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஐடி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details