சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூன் 14 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 11,030 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவர் உட்பட தமிழ்நாட்டின் மேலும் 331 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 427 நபர்களுக்கு செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 57 ஆயிரத்து 969 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
அவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஆயிரத்து 632 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 153 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 312ஆக உயர்ந்துள்ளது.