தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று..! - 366 பேர் கரோனாவுக்கு சிகிச்சை

தமிழ்நாட்டில் மேலும் 33 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 366 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TN corona
TN corona

By

Published : Mar 28, 2022, 10:34 PM IST

தமிழக சுகாதாரத்துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, "தமிழ்நாட்டில் புதிதாக 28 ஆயிரத்து 869 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மேலும் 33 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 16 பேருக்கும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், தூத்துக்குடி, தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 714 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 366 பேர் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் இன்றும் புதிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற நிலையிலேயே தொடர்கிறது. 24 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலகச் சந்தைகளை உலுக்கி எடுத்த அமெரிக்க பணவீக்கம்

ABOUT THE AUTHOR

...view details