இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 839 பேருக்கு பரிசோதனை - சென்னையில் கரோனா நிலவரம்
சென்னை: மருத்துவ முகாம்களில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 839 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஜூன் 19ஆம் தேதி மட்டும் சுமார் 527 காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் சென்னை நகரில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சோதனைகள் மேற்கொண்டதில் 33 ஆயிரத்து 839 அறிகுறிகளுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 900 பேர் அதிக நோய் அறிகுறிகள் காணப்பட்டதால், அவர்கள் கரோனா வைரஸ் தொற்று சோதனை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் அனைவருக்கும் சிறு அறிகுறிகள் மட்டுமே இருந்ததால், அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.