2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், "பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூபாய் 34 ஆயிரத்து 841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை 99.88 விழுக்காடு. இடைநிற்றல் விகிதம் 0.8 விழுக்காடாக உள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்காக 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் ரூபாய் 1018.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.