தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 15 நிமிடத்தில் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல்

சென்னையில் உள்ள தனியார் கோல்டு லோன் நிறுவனத்தில் 15 நிமிடத்தில் 32 கிலோ தங்க நகைகளை அடையாளம் தெரியாத கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.

15 நிமிடத்தில் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல்
15 நிமிடத்தில் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல்

By

Published : Aug 13, 2022, 10:21 PM IST

சென்னை: அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கியின் உடைய பெட் கோல்டு லோன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்று (ஆக.13) மதியம் 2.50 மணியளவில் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக வந்த இரண்டு வாடிக்கையாளர்கள் கழிவறையில் ஊழியர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டுள்ளனர். இதனால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

15 நிமிடத்தில் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல்

இந்தத் தகவலின் பேரில் அரும்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது ஊழியர்கள் பலர் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களை மீட்டதில் மூவரும் பெட் கோல்டு லோன் நிறுவனத்தின் கிளை மேலாளர் சுரேஷ், ஊழியர் ராஜலட்சுமி, காவலாளி சரவணன் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலராகப் பணியாற்றி வந்த பாடியைச் சேர்ந்த முருகன் என்பவர் இன்று சந்தேகத்திற்கிடமான நடந்துகொண்டதும். மாசா குளிர்பானத்தை வாங்கி வந்து காவலாளியான சரவணன் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கியதும். இதையடுத்து முருகன் கொடுத்த தகவலின் பேரில் மதியம் 2.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பின்வழியாக நிறுவனத்திற்குள் இருவர் நுழைந்ததும். பின்னர் மூவருமாக சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி லாக்கரில் இருந்த 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளைத் திருடி பையில் போட்டுக்கொண்டு தப்பித்ததும் தெரியவந்தது.

குறிப்பாக இந்த கொள்ளை சம்பவம் 15 நிமிடத்தில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நிறுவனத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதோடு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் பதிவுகளை எடுத்து சென்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன சோதனை சாவடி அமைத்தும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பாஜகவைச் சேர்ந்த மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details