தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் சுமார் 150க்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து வீடு வீடாக கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பாக கணக்கெடுத்துவருகின்றனர்.
கரோனா தொற்று குறித்து நடத்தப்பட்ட ஆய்வு இதுவரை, 3,036 பேருக்கு சிறியளவில் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதில் 2,261 பேருக்கு சாதாரண காய்ச்சல், சளி என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 775 பேர் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் யாருக்காவது ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:ஆவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா!