சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,000 தாண்டியது - Corona numbers rise in Chennai
சென்னை: சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 30,000-த்தை கடந்தது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ்
By
Published : Jun 14, 2020, 12:34 PM IST
சென்னையில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், தொற்றின் தாக்கம் குறையாமல் இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய தினம் மட்டும் 1484 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 235 பேர், அடுத்தபடியாக தேனாம்பேட்டையில் 188 பேர், அண்ணா நகரில் 179 பேர், தண்டையார்பேட்டையில் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
ராயபுரம்
5056 பேர்
திரு.வி.க. நகர்
2772 பேர்
வளசரவாக்கம்
1338 பேர்
தண்டையார்பேட்டை
3928 பேர்
தேனாம்பேட்டை
3652 பேர்
அம்பத்தூர்
1058 பேர்
கோடம்பாக்கம்
3267 பேர்
திருவொற்றியூர்
1113 பேர்
அடையாறு
1725 பேர்
அண்ணா நகர்
2960 பேர்
மாதவரம்
814 பேர்
மணலி
434 பேர்
சோழிங்கநல்லூர்
560 பேர்
பெருங்குடி
551 பேர்
ஆலந்தூர்
132 பேர்
மொத்தம் 15 மண்டலங்களில் 30,444 பேர் இந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 314 பேர் உயிரிழந்துள்ளனர்.