சென்னை: சென்னையில் தூய்மைப் பணிகளுக்காக, மாநகராட்சி சார்பில் 2,107 பேட்டரி வாகனங்கள், உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் சார்பில் 2,919 பேட்டரி வாகனங்கள், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் 837 பேட்டரி வாகனங்கள் என மொத்தம் 5,863 பேட்டரி வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த வாகனங்களுக்காக 77 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கியின் வாயிலாக சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பைகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.