தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 3000 கி.லிட்டர் ஆக்ஸிஜன் - nellai oxygen detail

சென்னையில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 3000 கி.லிட்டர் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டது.

o2
oxygen

By

Published : May 16, 2021, 5:49 PM IST

நெல்லை மாவட்டத்தில், நாள்தோறும் சராசரியாக 600-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய அரசு சிகிச்சை மையமான பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் கரோனா சிகிச்சைக்கு வருவதால், கடந்த சில வாரங்களாக கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் சென்னையிலிருந்து இன்று(மே 16) 3000 கிலோ லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டேங்கர் லாரி மூலம் கொண்டு வரப்பட்ட 3000 கி.லிட்டர் ஆக்ஸிஜன் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிட்டங்கியில் நிரப்பப்பட்டது. ஏற்கெனவே நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு கட்டங்களாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில் தற்போது முதன்முறையாக சென்னையில் இருந்து ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் தற்போது 800க்கும் மேற்பட்ட படுக்கைகளில் நோயாளிக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கி வருவதாகவும்; அதனால் தற்போது நெல்லை அரசு மருத்துவமனை உள்பட மாவட்டம் முழுவதும் கரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’139 ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம்’ - ரயில்வே நிர்வாகம் தகவல்

ABOUT THE AUTHOR

...view details