சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குருவப்பா செட்டி தெருவில் வசிப்பவர் சங்கரன். இவர், தனது குடும்பத்தினருடன் சொந்த வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில், அவர் நேற்று பிற்பகல் 12 மணிக்கு வெளியே சென்றுவிட்டு மீண்டும் 12.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
அரைமணிநேரத்தில் 25 சவரன் நகைகள் கொள்ளை! - heist
சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் வீட்டு உரிமையாளர் வெளியில் சென்று திரும்பிய அரைமணிநேரத்தில் வீட்டிலிருந்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, வீட்டின் கதவும், உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு சுமார் 25 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கொள்ளை குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சங்கரன் புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சங்கரன் வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வீட்டை விட்டுச் சென்ற அரைமணி நேரத்திற்குள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.