"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"
என்றொரு திருக்குறள் உண்டு. காதுகளும் கூசும் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் பண்புடைய மன்னனின் ஆளுமையின் கிழ் தங்கும் உலகு என்பது இக்குறளின் பொருள். இந்த குறளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். விமர்சனங்கள், அவதூறுகள், தடைகளை கடந்து இன்றைக்கு மக்களின் முதலமைச்சராய் நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
கரோனா நெருக்கடியான சூழ்நிலையில் அவர் ஆட்சிப் பொறுப்பில் அமரும் போது பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன. கரோனா நெருக்கடியை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார்? தமிழ்நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுப்பரா? அவரின் முதல் கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? கருணாநிதி இல்லாத திமுக-வின் ஆட்சி எப்படி இருக்கும்? . இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர் ஆட்சியில் அமர்ந்தப் பின் எடுத்த நடவடிக்கைகள் பதிலளித்தன.
முதல் விதை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராகப் பதவியேற்கும் போது ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அவமானம் பிறருக்கு நடக்கக்கூடாது என்பதில் அதிகாரத்திற்கு வந்த பிறகும் ஸ்டாலின் தெளிவாக இருந்தார். அதன் வெளிப்பாடாக தன்னை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த கமல் ஹாசன், ஓபிஎஸ் போன்றோருக்கு முன்வரிசையில் இருக்கையை ஒதுக்கி அரசியலுக்கான விதையைப் போட்டார்.
பதவியேற்ற அன்றே சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்ட முதலைச்சர் ஸ்டாலின் தன் தலைமையின் கீழ் பொறுப்பேற்ற 33 அமைச்சர்களையும் முதற்கட்டமாக, வேகமாக பரவி வந்த கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த களத்தில் இறங்கி பணியாற்ற உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் கீழ் பல அமைச்சர்களும் கரோனா தடுப்பு பணியில் தீவிரமாக களத்தில் இறங்கினர்.
முத்தவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் திமுக தொண்டர் ஒருவர் அம்மா உணவகத்தில் உணர்ச்சிவசப்பட்டு போஸ்டரை கிழித்தத்தை அரசியலாக்க முயன்றோருக்கு பதிலடியாக, அந்த நபர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு அவரை கட்சியை விட்டே நீக்கினார். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் திமுக தொண்டர்கள் ஈடுபட்டால் அவர்கள் கட்சியிலருந்து நீக்கப்படவார்கள் என்றும் அறிவித்தார்.
தேர்தலில் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பை அளிக்காத திருப்பூர், சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்த போது அதை கட்டுக்குள் கொண்டு வர முதலமைச்சர் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். கரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பிபிஇ கிட் அணிந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
முதலமைச்சர் அறையில் ஸ்டாலின் உயர் நீதிமன்றம் தொடங்கி எதிர்கட்சியினர் வரை அவரை பாராட்ட தொடங்கினர். மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பெற்று இன்றுடன் 30 நாள்கள் நிறைவடைகிறது. இந்த 30 நாள்களில் சுமார் ஒரு அமைச்சரவை கூட்டம், 3 எதிர்கட்சிகள் உடனான சந்திப்பு, 5 சுற்றுப்பயணங்கள், 6 கடிதங்கள், 8 ஆலோசனை கூட்டங்கள், 23 அறிவிப்புகள் என முதலமைச்சர் செயல்பாடுகள் அனைத்தும் தரமானதாக இருந்தது. கோட்டைக்கு சென்றது முதல் வண்டலூரில் சிங்கங்களை பார்க்கச் சென்றது வரையிலான அவரின் பயணம் குறித்து பார்க்கலாம்.
முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டங்கள் அதிரடி அறிவிப்புகள்:
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி
- ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
- சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம்
- கரோனா பாதிக்கப்ப்டடவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற ஏற்பாடு
- தென்சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை
- எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்
- மதுரையில் கருணாநிதி பெயரில் 70 கோடி ரூபாயில் நினைவு நூலகம்
கரோனா சிகிச்சை மையங்கள் திறப்பு - திருவாரூரில் 30 கோடி ரூபாயில் நெல் சேமிப்புக் கிடங்கு
- திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்
- ஆண்டுதோறும் 3 எழுத்தாளர்களுக்கு இலக்கயி மாமணி விருது
- கரோனா காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை
- போக்குவரத்து ஊழியர்களுக்கு 492 கோடி ரூபாய் ஓய்வுதிய பலன்கள்
- அர்ச்சகர்களுக்கு 4 ஆயிரம ரூபாய் மற்றும் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டம்
- மரக்கன்றுகள் நடும் திட்டம்
- பல்வேறு மாவட்டங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்
பிபிஇ கிட் அணிந்து கரோனா நோயாளிகளை சந்தித்த ஸ்டாலின்
அடுத்தடுத்த ஆய்வுகள்:
- சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 20ஆம் தேதி ஆய்வு
- செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி வளாகத்தில் மே 25ஆம் தேதி ஆய்வு
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 30, 31 ஆகிய இரு நாள்கள் ஆய்வு
- மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 21ஆம் தேதி ஆய்வு
நிவாரண பொருள்கள் வழங்கிய ஸ்டாலின்
கட்டாய கடிதங்கள்:
- எழுவர் விடுதலை தொடர்பாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
- செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு கடிதம்
- மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கடிதம்
- நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்
- காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை
- கருப்பு பூஞ்சைக்கு தடுப்பு மருதந்தைத் ஒதுக்ககோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம்
வண்டலூர் பூங்காவில் ஆய்வு
அவசர ஆலோசனைகள்:
- அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகள் குறித்து ஆலோசனை
- புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை
- கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்தவ நிபுணர்களுடன் ஆலோசனை
- முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்க ஆலோசனை
- பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிப்பது குறித்து ஆலோசனை
- கரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் மாவட்டங்களில் பரவலைக் கட்டுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
- ஊரடங்கு தளர்வு குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை
- தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தினருடன் ஆலோசனை
முதலமைச்சரின் நல்லாட்சி பயணம் தொடரட்டும்!