தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடியில் பணம் திருடு போனதாக நாடகமாடிய இளைஞர்கள் கைது - chennai theft case

நண்பர்களுடன் சேர்ந்து பணம் திருடு போனதாக நாடகமாடிய இளைஞர் அவரது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

Etv Bharatஆவடியில் பணம் திருடு போனதாக நாடகமாடிய இளைஞர்கள் கைது
Etv Bharatஆவடியில் பணம் திருடு போனதாக நாடகமாடிய இளைஞர்கள் கைது

By

Published : Jan 6, 2023, 10:08 AM IST

சென்னை:ஆவடி மூர்த்தி நகரில் பர்பில் ஆட்டோ கேஸ் பங்க் உள்ளது. இதில் சிவகங்கையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஜன.5) கலெக்ஷன் பணம் ரூ.1,54,000 ரொக்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் தன்னை இரண்டு பேர் வழிமறித்து செங்கலால் தாக்கி பணத்தைப் பறித்து சென்றதாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தம்மன், ஆவடி ஆய்வாளர் டில்லிபாபு விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பெயரில் கார்த்திக் ராஜாவிடம் ஆவடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பொய் கூறியிருப்பது தெரியவந்தது.

சிசிடிவியில் பதிவான காட்சிகள்

அதாவது பணத்தேவைக்காக கார்த்திக் ராஜா தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை எடுத்துக்கொண்டதுடன், அது திருடுபோனதாக நாடகமாடியது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று(ஜன.6) அதிகாலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கார்த்திக் ராஜாவின் நண்பர்கள் தங்கமுத்து, ஆனந்த் ஆகிய இருவரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 75,000 பணம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சிகரமான புள்ளி விவரம்!

ABOUT THE AUTHOR

...view details