தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2020, 5:18 PM IST

ETV Bharat / state

11 நாள்களுக்குப் பின்பு கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு: தலைமறைவான வடமாநில நபருக்கு போலீஸ் வலை!

சென்னை ராயபுரத்தில் 11 நாள்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரின் மூன்று வயது குழந்தையை காவல்துறையினர் இன்று(செப்.17) மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்
குழந்தையை மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்

சென்னை:ராயபுரத்தில் கடத்தப்பட்ட மூன்று வயது குழந்தையை 11 நாள்களுக்குப் பின்னர் காவல்துறையினர் செங்கல்பட்டு அருகே இன்று(செப்.17) மீட்டனர்.

சென்னை ராயபுரத்தில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பப்லு என்பவர் தனது குடும்பத்துடன் கட்டுமான பணியில் வேலை செய்து வருகிறார். மனைவி, நான்கு குழந்தைகளுடன் ராயபுரம் ரயில்வே நிலையம் அருகேயுள்ள தற்காலிக குடியிருப்பில் வசித்து வரும் பப்லு, கடந்த 6 ஆம் தேதி வேலை கேட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபரை தனது வீட்டில் தங்க வைத்தார்.

பப்லு வீட்டில் இல்லாத நேரத்தில், பெயர் தெரியாத அந்த நபர் பப்லுவின் மூன்று வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பியோடினார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், தனது குழந்தை காணாமல் போனது அறிந்து அதிர்ச்சியடைந்தார். நீண்ட நேரம் தேடியும் குழந்தை கிடைக்காததை அடுத்து, ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் காவல்துறையினர்!

இப்புகாரின் பேரில் ராயபுரம் காவல்துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று(செப்.17) செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் அருகே கட்டுமானம் நடைபெற்றும் வரும் பகுதியிலிருந்து குழந்தையை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையிலான காவல்துறையினர், பெற்றோரிடம் மீட்ட குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய நபரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் குழந்தை கடத்தல் - காவல்துறை வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details