தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று வயது குழந்தையின் உயிரைப் பறித்த ’மாஞ்சா நூல்’ - தொடரும் சோகம் - manja kite death in chennai

சென்னை: சாலையில் சென்றுகொண்டிருந்த போது ’மாஞ்சா’ நூல் அறுத்ததில் மூன்று வயது குழந்தை துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3yearoldboy

By

Published : Nov 3, 2019, 9:45 PM IST

சென்னையில் பல்வேறு இடங்களில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம்விடுவதால் ஏற்கனவே பல உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதனால் காவல் துறையினர் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம்விடுவதற்கு தடை விதித்திருந்தனர். ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் பலரும் மாஞ்சா நூல் மூலம் பட்டம்விடுவதை தொடர்ந்து செய்துவந்தனர்.

இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில் மூன்று வயது குழந்தை மாஞ்சா நூலால் கழுத்து அறுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் தன்னுடைய மூன்று வயது மகன் அபினேஷுடன் இன்று மாலை ஐந்து மணியளவில் தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

உயிரிழந்த குழந்தை அபினேஷ்

அப்போது கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ‘மாஞ்சா நூல்’ ஒன்று சிறுவனின் கழுத்தில் சிக்கியது. இதனையடுத்து வலிதாங்கமுடியாம்ல் குழந்தை அபினேஷ் துடிதுடித்துள்ளார். பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது அபினேஷ் உயிரிழந்தார்.

மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான மாஞ்சா நூல் பயன்படுத்தியவரை காவலர்கள் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மாஞ்சா நூலால் பலியான சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details