தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசீர்வாதம் செய்கிறேன் என பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகள்! - ஆசிர்வாதம் செய்வதாக கூறி கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசரிடம் பர்சை பறித்து சென்ற 3 திருநங்கைகளை

சென்னை: ஆசீர்வாதம் செய்வதாகக் கூறி கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசரிடம் பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

transgendersnatching
பர்சை பறித்து சென்ற 3 திருநங்கைகள்

By

Published : Nov 28, 2019, 1:57 PM IST

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (31). இவர் பிரபல கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறார். இவர் பாண்டி பஜார் பாலாஜி அவென்யூவில் கட்டுமானப் பணி நடைபெறுவதால் அங்கு இருந்துள்ளார்.

அப்போது, மூன்று திருநங்கைகள் கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு, காவலாளியைத் தள்ளிவிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கிருந்த சூப்பர்வைசர் நடேசனிடம், 'ஆசீர்வாதம் செய்கிறேன். 10 ரூபாய் தருமாறு' கேட்டுள்ளனர். பின்னர், நடேசன் தனது பர்சை எடுத்ததும் திருநங்கைகள் பர்சை பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதை எதிர்பார்க்காத நடேசன் அவர்களைப் பிடிப்பதற்குள் வெளியே நின்றிருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகள்

இது குறித்து நடேசன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில், தனது பர்சிலிருந்த 5 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். தற்போது, காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சவ ஊர்வளத்தில் இளைஞர் வெட்டிப்படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details