சென்னை: கரோனா தொற்று ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறுது. நான்கு மாதங்களுக்கு பின்னர் கடற்கரைகள் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று (ஆக.23) தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேர் சுற்றிப் பார்ப்பதற்காக மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதி இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அதில் மூன்று மாணவர்கள் கடலில் இறங்கி குளிக்க வேண்டும் எனக் கூறி கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குளிக்க சென்ற பல்லாவரத்தைச் சேர்ந்த நிர்மல்குமார்(17), ஆலப்பாக்ககத்தைச் சேர்ந்த சவுரிநாதன்(17) மற்றும் தர்மராஜன்(18) ஆகிய மூன்று பேரும் எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர்.
இதனை அடுத்து உணவு வாங்கி வரச் சென்ற மற்ற மூன்று மாணவர்களான சாலமன், சக்திவேல். மற்றும் ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் அவர்களது நண்பர்கள் காணாமல் போனது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.