தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

By

Published : Sep 6, 2020, 3:09 PM IST

1. சத்துணவுத் திட்டத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய குழு!

சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் காலியாகும் பணியிடங்களுக்கு கரோனா காலத்திலும் தகுதியான நபர்களை தேர்வு செய்ய குழுக்களை அமைத்து சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அறிவித்துள்ளது.

2. 'ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது' - பள்ளிக் கல்வித்துறை!

சென்னை: ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், அவ்வாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது புகார் தெரிவிக்க இணையதள முகவரியையும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்டுள்ளார்.

3. இந்தியாவில் உச்சத்தில் கரோனா! ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் பாதிப்பு

டெல்லி : நேற்று (செப்.05) மட்டும் 90 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811ஆக உயர்ந்துள்ளது‌.

4. தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலத்திற்கு 3 சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம், திருச்சி ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு மூன்று ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

5.சென்னையில் தொற்றிலிருந்தது குணமடைந்தவர்கள் 90 சதவிகிதமாக அதிகரிப்பு!

சென்னை : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விழுக்காடு 90ஆக உயர்த்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

6. வாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக் செய்திகள்!

வாரத்தின் டெக் செய்திகள் குறித்த மேற்பார்வையை காணலாம்... தொடர்ந்து படிக்க

7. இரவு நேரங்களில் கவனத்துடன் பேருந்துகளை இயக்க அறிவுரை!

சென்னை : கடந்த ஐந்து மாதங்களாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இரவில் ஓய்வில் இருந்து வந்துள்ள நிலையில், இரவு நேரங்களில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

8. சுஷாந்த் வழக்கு : வீட்டு மேலாளர், காதலியின் சகோதரரை நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவு

மும்பை : ரியா சக்ரவர்த்தியின் சகோதரர், சுஷாந்தின் வீட்டு மேலாளர் இருவரையும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கிய மதிமுக

நாகப்பட்டினம் : மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் சிறந்த கல்வி சேவையாற்றிய ஆசிரியருக்கு அவரது வீட்டிற்கு நேரில் சென்று விருது வழங்கப்பட்டது.

10. பசிக்காக பச்சிளம் குழந்தையை விற்கத் துணிந்த தாய்!

அமராவதி: ஆந்திராவில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்திற்காக போராடிய தாய், தன் பெற்ற குழந்தையையே விற்கத் துணிந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details