தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM
3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

By

Published : Oct 4, 2021, 3:11 PM IST

கே.பி. பார்க் அடுக்குமாடி: கட்டுமானம் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

கே. பி. பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பது குறித்த ஆய்வறிக்கையை ஐஐடி குழு தாக்கல்செய்தது. இதில் கட்டுமானம் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வு பாதிப்பு குறித்த ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை, கேரளா உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சருக்கு அனுப்பி வைத்து, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

'12 முதல் 18 வயது வரை தடுப்பூசித் திட்டம் தமிழ்நாட்டில்தான் முதலில் செயல்படுத்தப்படும்'

12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழ்நாட்டில்தான் முதலில் செயல்படுத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

திருப்பதியில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி எப்போது?

சென்னை: திருப்பதியில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மீண்டும் களைகட்டுமா? - தீபாவளியை எதிர்நோக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தீபாவளி நெருங்கிவரும் நிலையில் அதனை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ் அவர்கள் படித்த பள்ளியில் வழங்கப்பட்டுவருகிறது.

#3YearsOf96 - உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி

பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் திரைப்படம் கல்ட் திரைப்படத்தின் (cult movie) வரிசையில் இணைகிறது. அப்படி பலரால் கொண்டாடப்பட்ட தமிழ்த் திரைப்படம் 96 வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவடைகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்': இசை குறித்து விவாதித்த படக்குழு

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்ஃபாதர் படத்தின் இசையமைக்கும் பணி குறித்து தமனிடம் இயக்குநர் மோகன் ராஜா, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கேட்டறிந்துள்ளனர்.

தூய்மைப் பணியில் பிரியங்கா காந்தி: வைரலாகும் காணொலி

தூய்மைப் பணியில் பிரியங்கா காந்தி: வைரலாகும் காணொலி

உ.பி வன்முறை - சரமாரி கேள்வியெழுப்பிய பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேச வன்முறையின்போது பாதிக்கப்பட்ட உழவர்களை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை கிராமத்திற்குள் நுழையவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details