தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்...

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 29, 2020, 3:17 PM IST

1. சீனாவை மீண்டும் அச்சுறுத்துகிறதா கரோனா?

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 83 ஆயிரத்து 647க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 62 ஆயிரத்து 473 பேர் இந்த கொடிய வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். ஒரு கோடியே 4 லட்சத்து 45 ஆயிரத்து 764 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

2.மாரிதாஸுக்கு வாய்ப்பூட்டு போட்ட உயர் நீதிமன்றம்!

நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து அவதூறான செய்திகள் வெளியிட்ட மாரிதாஸிடம் ரூ. 1.5 கோடி இழப்பீடு கேட்டு அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாஸுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.சபரிமலை விமான நிலையம்: தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகராக அமெரிக்க நிறுவனத்தை நியமித்தது சட்டமீறல் என எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்துள்ளார்.

4.இறுதிக்கட்ட பரிசோதனையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து!

நியூயார்க்: கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் mRNA-1273 தடுப்பூசி மருந்து ஆராய்ச்சியின் இறுதிக்கட்ட சோதனைக்கு 6 பேர் உள்படுத்தப்படுவதாக நியூயார்க் டைம்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.

5.மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

சென்னை: சேனல் விஷன் என்ற யூ-டியூப் சேனலில் மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனக்கும், தனது குடும்பத்தாரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

6.காக்க... காக்க... சுற்றுச்சூழல் காக்க - நடிகர் சூர்யா ட்வீட்

சென்னை: பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனம் மிக ஆபத்தானது என நடிகர் சூர்யா சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

7.எழுவர் விடுதலை தாமதம் ஏன்? உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் பதிலை கூறிய தமிழ்நாடு அரசு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்ய, பல்நோக்கு விசாரணைக் குழுவின் முடிவுக்கு ஆளுநர் காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

8.11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு 31ஆம் தேதி வெளியீடு

சென்னை:பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும், பகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் ஜூலை 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

9. நிசாம் மன்னனின் கடைசி பிள்ளை மறைவு!

கடைசியாக அட்சி செய்த மறைந்த ஹைதராபாத் நிசாம் மிர் ஒஸ்மான் அலி கானின் மகளும், நிசாம் மன்னனின் கடைசி நேரடி வாரிசுமான சாஹெப்சாடி பஷீருன்னிசா பேகம் நேற்று காலமானார். அவருக்கு வயது 93.

10.மாநிலத்தை மீட்டெடுக்க எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: உமர் அப்துல்லா

மாநில அங்கீகாரத்தைத் திரும்பப்பெறும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் தவறாக கருத்துக்களை பரப்பிவரும் செய்தியாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details