சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் எம்ஜிஆர் நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வசித்துவருபவர் கோபால் (34). இவர் சேலையூர் பாரத் இன்ஜினியரிங் கல்லூரி அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
நேற்றிரவு (மே.9) கோபால் அவரின் வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் கோபாலின் உடலில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் கோபாலின் இடது கையின் விரல்கள் துண்டாகி விட்டன. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கோபாலை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த சேலையூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இடத் தகராறு காரணமாக ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு!