தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 14, 2019, 10:56 AM IST

ETV Bharat / state

மீன்வளப் பல்கலைக் கழகத்தில் புதியதாக 3 படிப்புகள் தொடக்கம்

சென்னை: மீன்வளப்  பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு புதியதாக 3 இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

File pic

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "இளநிலை மீன்வள அறிவியலில் 160 இடங்கள், இளநிலை மீன்வளப் பொறியியலில் 30 இடங்கள், உயிர் தொழில்நுட்பவியலில் 40 இடங்கள், உணவுத் தொழில்நுட்பவியலில் 40 இடங்கள், இளநிலை தொழிற்கல்வியில் 25 இடங்கள் என பட்டப் படிப்புகளில் இடங்கள் உள்ளன.

மேலும், இந்த ஆண்டு 3 பட்டப்படிப்புகள் புதியதாக தொடங்கப்படுகின்றன. இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் பொறியியல் பிரிவில் 40 இடங்கள், மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் பிரிவில் 20 இடங்கள், வணிக நிர்வாகவியல் பிரிவில் 20 இடங்கள் ஆகிய 4 வருட பி.டெக், பி.பி.ஏ. பட்டப்படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இந்த படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில்www.tnjfu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மே.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜீன் மாதம் 2ஆவது வாரம் வெளியிடப்படும். ஜீலை மாதம் 2ஆவது வாரத்தில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படும். கூடுதல் விபரங்களுக்கு மாணவர்கள் 04365-256430, 94426 01908ஆகிய எண்களின் மூலம் தேவையான விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம், என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details