தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் இடமாற்றம் - கருவூல ஆணையர்

தமிழ்நாட்டில் மூன்று ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

3 IAS officers relocated in Tamil Nadu
3 IAS officers relocated in Tamil Nadu

By

Published : Nov 13, 2020, 5:13 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மூன்று ஐ.ஏ.எஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பில், கருவூல ஆணையராக இருந்த சமயமூர்த்தி,போக்குவரத்துத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், கருவூல ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப், வெளிநாடு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று திருவண்ணாமலை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துகுடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசாணை!

ABOUT THE AUTHOR

...view details