சென்னை:சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சருக்கு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த சாலையை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, தரக்கட்டுபாடு குழுவினருடன், நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர் கீதா, ஆண்டிச்சியூரணி - ஓட்டாணம் இடையே அமைக்கப்பட்ட சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்து முறையான விசாரணை நடத்தினார்.
அந்த ஆய்வில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது . தரமற்ற சாலைகள் அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப்பொறியாளர் மாரியப்பன் , உதவி பொறியாளர் மருதுபாண்டி மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் நவநீதி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செந்தில் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.
மேலும், சாலை பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அன்ட் கோ வுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொடநாடு கொலை வழக்கில் கைதான சயனுக்கு நிபந்தனை ஜாமீன்