சென்னை:போகி பண்டிகை கொண்டாடப்பட்டதின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கடும் புகை மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று சென்னையில் இருந்து விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில் 2வது நாளாக இன்று காலையும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்: லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், குவைத்தில் இருந்து சென்னை வந்த குவைத் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானிகள், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், புனேயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல் டெல்லி கொல்கத்தா மும்பை செங்காடு ஆகிய நான்கு மாதங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் கோவை திருவனந்தபுரம் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பினர். அதைப்போல் மும்பை கொல்கத்தா ஹைதராபாத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் இருந்தது.’