சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோவேக்சின்' தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட' கோவீஷீல்டு' தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுபாடு ஏற்ப்பட்டன. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தியது.