தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறுந்து விழுந்த மின்கம்பி - சென்னையில் மாடு உட்பட 4 விலங்குகள் பலி - Chennai EB

மாண்டஸ் புயலின்போது வீசிய சூறைக்காற்றால் தெருவில் அறுந்து விழுந்த மின் கம்பியினால் ஒரு மாடு உட்பட 4 விலங்குகள் உயிரிழந்தன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 10, 2022, 2:02 PM IST

Updated : Dec 10, 2022, 2:50 PM IST

சென்னை: மடிப்பாக்கம், சதாசிவம் நகர், 4வது குறுக்கு தெருவில் மாண்டஸ் புயல் காரணமாக மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில், மின் கம்பி அறுந்து விழுந்தது. மின் கம்பி அறுந்து விழுந்தததில் ஒரு மாடு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் மின்வாரிய உதவி பொறியாளர் பாபு என்பவருக்கு தகவல் அளித்தும், அவர் நிகழ்விடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் இணைப்பை சரிசெய்தனர். பின்னர் மீண்டும், மின்கம்பி அறுந்து விழுந்து மூன்று நாய்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. பின்னர், அப்பகுதி மக்கள் 188ஆவது வார்டு திமுக வட்ட செயலாளர் ரஞ்சித் குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

அவர் உடனடியாக வந்து மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து உயிரிழந்த மாடு மற்றும் நாய்களை மாநகராட்சி உதவி பொறியாளர் திவாகர் அப்புறப்படுத்தினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மின் வாரிய பொறியாளரின் அலட்சியமே நாய்கள் உயிரிழப்பிற்குக் காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அறுந்து விழுந்த மின்கம்பி - சென்னையில் மாடு உட்பட 4 விலங்குகள் பலி

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேர் பலி

Last Updated : Dec 10, 2022, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details