தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அறிவிப்பு - 16th tn assembly

3 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அறிவிப்பு
3 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அறிவிப்பு

By

Published : Jun 21, 2021, 12:54 PM IST

Updated : Jun 21, 2021, 2:02 PM IST

12:51 June 21

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்த நிகழ்ச்சி நிரல்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின், சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆளுநர் உரையுடன் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது. 

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வியாழன் வரை, 3 நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 'நாளை முதல் வருகின்ற 24ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நாளை சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானமும்,  ஆளுநர் உரை மீதான விவாதம் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. 

இறுதி நாளன்று ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை தரும் நிகழ்வுகளுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. 

இதையும் படிங்க: 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்: ஆளுநரின் உரையின் முக்கிய அம்சங்கள்

Last Updated : Jun 21, 2021, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details