சென்னையில் அமைந்தகரை தனியார் வளாகம் சந்திப்பு அருகில், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும், தேர்தல் பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மகேஷ்குமார் அகர்வால், "தேர்தல் பணிக்காக 231 பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையிலும் 7.5 கோடி பணம், 46 கிலோ தங்கம், 107 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுபானங்களைச் சோதனை செய்வதற்குத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1000 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 107 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2000 ரவுடிகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். நேற்று மட்டும் 19 ரவுடிகளை கைது செய்துள்ளோம்.