சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களையும் - பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்கள் ஓட்டுதல், சாகசம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து கைதுசெய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று வடபழனி ஜவகர்லால் நேரு நூறு அடி சாலையில் மூன்று இளைஞர்கள் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக பாண்டிபஜார் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
'ஆபத்தை நோக்கி பயணிக்கும் உலகம்' - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்
தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சென்றபோது அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மூன்று இளைஞர்கள் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.