தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழகு நிலையத்தில் நகை, செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

சென்னை: அழகு நிலையத்திற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

3 பேர் கைது
3 பேர் கைது

By

Published : Feb 3, 2021, 4:43 PM IST

சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு 5 பேர் புகுந்து, ஊழியர்களிடமிருந்து கத்தியை காட்டி மிரட்டி 7 செல்போன்கள், 33 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் சிசிடிவி காட்சி பதிவை ஆய்வு செய்தனர். ஏற்கனவே இதேபோல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலிடம் விசாரணை நடைபெற்றது.

அதில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்து (23), அருண் குமார், மோகன் உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து முத்து, அருண் குமார் ஆகிய 2 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் மோகன் என்பவர் காவல் துறையினர் போல் நடித்து தொழிலதிபரை கடத்தியபோது அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போதை மருந்துக்காக மருந்துக்கடைகளில் திருடிய இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details