தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 2557 இடங்களுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு - என்ஆர்ஐ இடங்களுக்கு ஒதுக்கீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள 2557 இடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் 22ஆம் தேதி வரையில் ஆன்லைனில் நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் 2557 இடங்களுக்கு 2ஆம் கட்டக் கலந்தாய்வு
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் 2557 இடங்களுக்கு 2ஆம் கட்டக் கலந்தாய்வு

By

Published : Nov 17, 2022, 10:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி முதல் முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

முதல்கட்ட கலந்தாய்வில் 8408 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 6803 மாணவர்கள் ஒதுக்கீட்டு இடங்களைப்பதிவிறக்கம் செய்தனர். அவர்களிலும் மருத்துவப்படிப்பில் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கான 2ஆம் கட்டக்கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

2022-2023ஆம் ஆண்டில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவத்திற்கு (MBBS) 459 இடங்களும், பல் மருத்துவத்திற்கு (BDS) 106 இடங்கள் என 565 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர்.

பொறியியல் படிப்பினை இடத்தைத் தேர்வு செய்த ஒரு மாணவி மருத்துவப்படிப்பில் வந்து சேரவில்லை. தனியார் கல்லூரியில் இடங்கள் அதிகரித்து 4 இடங்கள் கூடுதலாக கிடைத்ததால், எம்பிபிஎஸ் படிப்பில் 5 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 மாணவர்களும், தனியார் மருத்துவக்கல்லூரியில் 25 இடங்களையும் தேர்வு செய்த மாணவர்கள் சேரவில்லை.

மேலும் கல்லூரியில் கூடுதல் இடம் கிடைத்ததால் 3 இடங்கள் கூடியுள்ளன. எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 5 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 30 இடங்களும் காலியாக உள்ளன.

முதல்கட்டக் கலந்தாய்வில் பொதுப்பிரிவில் இடங்களைத்தேர்வு செய்து மாணவர்கள் சேராமல் இருப்பதால் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியில் 104 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரியில் 2 இடங்களும், அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் 254 இடங்களும், கூடுதலாக புதிய கல்லூரியினால் 46 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 41 இடங்களும் காலியாக உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 2557 இடங்களுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு

பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 74 இடங்களும், தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 714 இடங்களும், கூடுதலாக புதியதாக வந்த 27 இடங்களும் காலியாக உள்ளன. இதில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 1262 இடங்கள் காலியாக இருக்கின்றன.

எம்பிபிஎஸ் படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் 355 இடங்களும், தனியார் பல்கலைக்கழகத்தில் 87 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 426 இடங்களும் உள்ளன.

தனியார் மருத்துவக்கல்லூரியில் என்ஆர்ஐ இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர்கள் சேராமல் காலவதியான எம்பிபிஎஸ் படிப்பில் 258 இடங்களும், தனியார் பல்கலைக்கழகத்தில் 39 இடங்களும், பல் மருத்துவக்கல்லூரியில் 15 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு பொதுப்பிரிவில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தனியார் மருத்துவக்கல்லூரியில் என்ஆர்ஐ இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 79 இடங்களும், தனியார் பல்கலைக்கழகத்தில் ஒரு இடம் உட்பட 80 இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு வரும் 19ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கைதிகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய டிஜிபி!

ABOUT THE AUTHOR

...view details