சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (ஜனவரி 27) வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவர் உடமைகளை சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அந்தப் பயணியை முழுமையாக சோதித்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த ஷூக்களை சோதனையிட்டனர். இரண்டு ஷூக்களிலும் காலனி வடிவத்தில் தங்க தகடுகளை கருப்பு கலர் டேப் ஒட்டி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 1.45 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 67 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல் பயணியை கைது செய்தனர்.
அதன்பின் துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உடமைகளை சோதித்த போது, லேப்டாப் சார்ஜர்கள் எடுத்து வந்திருந்தனர்.