தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 29 மீனவர்கள் - Sri Lankan Navy have been released Tamil Nadu fishermen

இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 29 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

29 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy have been released and brought to Chennai  இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு வந்த மீனவர்கள் : என்று தீரும் அவர்கள் துயரம் ?
29 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy have been released and brought to Chennai இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு வந்த மீனவர்கள் : என்று தீரும் அவர்கள் துயரம் ?

By

Published : Mar 10, 2022, 3:08 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் ஆம் 27 தேதி நள்ளிரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதோடு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்து. படகு மற்றும் மீன் வலைகளை பறிமுதல் செய்தனர்.

அதன்பின் 29 மீனவர்களையும் இலங்கை அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென அவர்கள் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு வெளியுறவுத் துறை மூலமாக தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தூதரக அதிகாரிகள் 29 மீனர்வகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தினர்.

இதன் பின்பு மீனவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் இந்திய தூதரக அதிகாரிகள் எமர்ஜென்ஸி சர்டிபிகேட் வழங்கி 29 மீனவர்களையும் நேற்று இரவு விமானம் மூலம் இலங்கையில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை அழைத்துவரப்பட்டனர். சென்னை வந்த 29 மீனவர்களையும் தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை மத்திய மாநில அரசுகள் பெற்றுத் தர வேண்டும், மேலும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படை பிடிப்பதைத் தடுக்க நிரந்தர தீர்வுகள் காண வேண்டும். இலங்கை சிறையில் இருந்து தங்களை விடுதலை செய்து சென்னை அழைத்துவர உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வெற்றி எங்களுக்கு ஜிலேபி உங்களுக்கு... பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆர்ப்பரிப்பு...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details