கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 21 முதல் தொடங்கியது.
அன்றைய தினம் முதல் தற்போது வரை மொத்தம் 1 கோடியே 1 லட்சத்து 31 ஆயிரத்து 685 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் மொத்தம் 3,55,579 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், ஜூலை மாதத்தில் வரை மொத்தம் 18,46,466 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 22,74,066 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக அக்டோபர் 13 அன்று 1,17,630 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 44,716 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 15,94,053 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டில் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழக்கம் போல் வழங்கி வருகிறது.
மெட்ரோ ரயில் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்திப் பயணிக்கும் பயணிகளுக்குப் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிப்பு